Tuesday, September 28, 2010

நாலு எந்திரன் டிக்கெட் வேண்டும் சார்....

VAS சினிமா ஹால் (முன் பதிவு செய்யும் இடம்)


பங்கட் மேனேஜர் ரூமில் இருந்து எந்திரன் படம் முன்பதிவு இன்னைக்கு எவ்வளவு டிக்கெட் மீதி உள்ளது என்று கணக்கு பார்த்து கொண்டிருக்கிறார்(மொத்தம் நாலு டிக்கெட் தான் இருக்கு ).வெளியே கூட்டம் அதிகமாக இருக்கிறது..அப்பொழுது......

பங்கட் அய்யா ...பங்கட் அய்யா............

பங்கட் :யாருப்பா பிச்சைகாரர்களை உள்ளே விட்டது.

காவலாளி :இல்ல நல்ல டிரஸ் போட்டு நாலு பேர் வந்தாங்க உங்கள நல்ல தெரியும்னு சொன்னங்க

பங்கட் :அப்படியா ?.எல்லோரும் உங்க பேர சொல்லுங்க

முதல்ல ஒருத்தன் நான் திருட்டு போலீஸ் ரொம்ப நல்லவன் ன்னு சொன்னான்.

திருட்டு போலீஸ் :எந்திரன் டிக்கெட் வேணும் .எனக்கு ரெத்தின வேலு வை தெரியும்

பங்கட் :என்ன திருட்டு போலீஸ்ன்னு சொல்லுற தாடியோட வந்திருக்க ?

திருட்டு போலீஸ் :நாலு நாளா   டிக்கெட்டுக்காக அலையுறோம் யாரும் டிக்கெட் தீர்ந்து போச்சி ன்னு சொல்லுறாங்க .அதன் உங்க கிட்ட வந்து சினிமா ஹால்லா நல்ல கழுவி விட்டுட்டு டிக்கெட் கேக்கலாம்னு வந்தோம் .........

பங்கட் : உன்பேரு என்ன ?

இன்னொருத்தன் :ரசிகன்

பங்கட் :அப்ப நாங்க எல்லாம் ரசிக்க தெரியாதவங்களா பேர கேட்ட என்னோவோ சொல்லுற

ரசிகன் :சவுண்ட் பாண்டி

பங்கட் :சவுண்ட் விடரவங்களுக்கு எல்லாம் டிக்கெட் கிடையாது

பங்கட் :உன் பேறு என்ன ?

u asked my name ? .my name is ஆணு .

பங்கட் :பப்பு இது என்னமோ சொல்லுது எனக்கு புரியலப்பா ?.

பப்பு :இவங்களுக்கு உள்ள தமிழே ஒழுங்கா தெரியல இதுல வேற ஹிந்தில பேசுறாங்க பங்கட் .டிக்கெட் கொடுக்காதீங்க .........

பங்கட் :யாருமா இது ஆணு ,பெண்ணு பேர வைகிரவங்களுக்கு எல்லாம் டிக்கெட் கிடையாது .போமா வெளியே ..

பங்கட் :உன் பேரு என்ன ?

என்பேரு வருண குமார் .....mauritius இருந்து வரேன் .சார் ........ரொம்ப கேவலேமா...டிக்கெட்டுக்கு கெஞ்சுறார்(காலில் விழுகிறார்)....

பங்கட் :உங்கள் எல்லாம் பார்த்த பிக் பாக்கெட் கேசு மாதிரி தெரியுதே .............

திருட்டு போலீஸ் :நானு டேமேஜெர்..அய்யா

பங்கட் : இங்க என்னத்த டேமேஜ் பண்ண வந்தாயோ ?போயா வெளியே.

சவுண்ட் பாண்டி :நான் சென்னை ல தான் குப்பை கொட்டுறேன் .....

அப்ப பார்த்து சே அண்ணன் வருகிறார்

என்ன பங்கட் ஒரே பிச்சை காரர்கள நிக்குறாங்க .......

பங்கட் :எந்திரன் டிக்கெட் வேணுமாம் ?

சே எல்லோரையும் ஏற இறங்க பார்த்துகிட்டு .

எல்லோரும் வெளியே பத்து எருமை மாடு நிக்குது .எல்லோரும் போய் அத குளுப்பாட்டி கொண்டுவாங்க எந்திரன் டிக்கெட் கொடுக்க சொல்லுறேன் .சரியா........

எல்லோரும் எருமை மாட குளிப்பாட்ட போய்ட்டாங்க..............

எல்லோரும் போனதும் கறார் பாண்டி உள்ள வாறார்.கூடவே நம்ம ஆட்டுகுட்டி தாரசாமி யும் வருகிறார் .பங்கட் நாலு டிக்கெட் கொடு தாரசாமிக்கு , சமஸ்கிறதுல கவிதை எழுதியவர் இல்ல நம்ம காவா அண்ணன் அவர்க்கு ,பஜ்ஜி கரவணன் க்கு அப்புறும் மெயின் ஆளு நம்ம பப்புவுக்கு ன்னு கேட்டு வாங்கிட்டு போறாரு .

குறிப்பு :இக்கதையில் வரும் பேர்கள் எல்லாம் கற்பனையே ............

Sunday, September 26, 2010

மானத்தை காப்பாற்றுமா நம் இந்திய அரசு ?

இந்திய மக்களின் வரிப்பணம் 70ஆயிரம் கோடியை வாரி இறைத்து காமன்வெல்த் போட்டியை நமது இந்திய அரசு நடத்த போகிறது .இதை நடத்துவதற்கு முன் நம் அரசுக்கு இந்த போட்டியை நடத்த தகுதியும் ,திறமையும் இருகிறதா என்பதை மத்திய அரசோ அல்லது விளையாட்டு அமைப்புகளோ யோசித்ததாக தெரியவேயில்லை.நமது அரசிடம் பணம் கொட்டி கிடக்கிறது அதனால் இந்த போட்டியை நடத்தினால் என்ன என்ற மேம்போக்கான எண்ணம் மட்டுமே இருக்கிறது .

நம் அரசு நம்ம தேவா அண்ணன், சௌந்தர்  , அருண் , ரமேஷ்  மற்றும் ஜெ அண்ணன் மாதிரி,அவர்கள் தான் தினமும் ஒரு கவிதை ,கட்டுரை போன்ற நல்ல விசயங்களை நமது பதிவுலகிற்கு தினமும் தருகிறார்கள் அவர்களிடம் கொட்டிகிடக்கும் தமிழ் புலமையும் ,அறிவு சார்ந்த விசயங்களையும் நாம் பதிவுலகில் தினமும் பார்க்கிறோம்.நமது நாட்டின் பணம் போல.

ஆனால் நமது இந்திய நாடோ என்னையும் ,terrorயும் மாதிரி என்ன தான் பணம் கொட்டி கிடக்கிறது என்றாலும் வறுமை ,வேலையின்மை போன்ற நிறைய விசயங்கள் இருக்கிறது.எனக்கும் , நம்ம terrrorக்கு இதே மாதிரி கவிதை,கட்டுரை,படைப்புகள்,சிறுகதை போன்றவைகள் எழுத தெரிந்தாலும் .தமிழை குத்உயிரும்,கொலை உயிருமாக தூக்கில் ஏற்றிவிடுவோம்.என்ன தான் அறிவு கொட்டி கிடந்தாலும் அப்ப அப்ப எதாவது பதிவு போடுவோம்.சரி விசயத்துக்கு வருவோம் .

இத்தனை கோடி செலவு செய்து நம் அரசு இந்தியாவின் பெருமையை சீர்குலைத்து உள்ளது.அக்டோபர் 3ஆம் தேதி தொடங்க உள்ள காமன் வெல்த் போட்டியை முதலில் பிரபல படித்தியது அதில் நடைபெற்ற ஊழல்கள் தான் .அதன் பின் தொடர்ச்சியாக முதலில்  நுழைவு வாயில் மேற்கூரை இடிந்து விழுந்தது ,அதற்க்கு பின் மேம்பாலம் இடிந்து விழுந்தது ,அதற்க்கு அடுத்த நாள் அலங்கார கூரைகளில் இருந்து ஓடுகள் சரிந்து விழுந்தன ,சுகாதார குறைவான வீரர்கள் தங்கும் அறைகள் உள்ளன இது எல்லாவற்றுக்கும் மேலாக தீவிரவாதிகளின் தாக்குதல் போன்ற பாதுகாப்பு குறைபாடுகள் இப்படி பல அதிர்ச்சிஊட்டூம் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது .இன்று காலையில்  கூட (27-9-10)வீரர்கள் தங்கும் அறையில் பாம்பு இருப்பதாக சேதிகள் வருகின்றன .இதனால் பல வீரர்கள் போட்டியை புறகணிக்க போவதாக கூறி உள்ளனர் .சின்ன சின்ன நாடுகள் கூட இந்தியாவை கேள்வி கேட்கின்றன?.

இந்த அசிங்கத்திற்கு ஒருங்கினைபாளராக கல்மாடி இருக்கிறார் .இவர் மட்டுமே இதற்க்கு பொறுப்பல்ல தன்கடமையை செய்யாத M.S.கில் ,டில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் ,இவர்களுக்கு மேலாக பிரதமர் மன்மோகன்சிங்க் உம் இந்த ஊழல்களுக்கும் ,சரி வர திட்டமிடாமல் இப்படியாய் நடத்துவதற்கு நிதி ஒதுக்கியது போன்ற காரணங்களால் இவர்களும் குற்றவாளிகளே .


என்னையும் ,terror-யும் இந்த அரசு அவமானம் இல்லாமல் காப்பாற்றுமா?(அதாங்க நம்ம நாட்டை மத்திய அரசு காப்பாற்றுமா நான்  ஏற்கனேவே நானும்,terror -உம இந்திய போல ன்னு சொல்லி இருக்கேன் இல்ல ).

Sunday, September 19, 2010

உயிர்னா என்ன ?

காலாண்டு பரீட்சை ஆரம்பித்து விட்டது குழந்தைக்கு ஒழுங்காக பாடம் சொல்லி கொடுங்க என்று உத்தரவு வந்தது.சரி உத்தரவை மீறினால் தண்டனை அனுபவிக்க வேண்டுமே என்று என் குட்டி மக்கா  இங்க வா நான் இன்னைக்கு உனக்கு பாடம் சொல்லித்தரேன்  சொன்னேன் .குழந்தை என்னை ஒரு மாதிரியாக பார்த்தது (நமக்கு  வராத ஒன்னே பற்றி ஏன்  சொல்லுறே).இன்று இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று அறவியல் பாடத்தை எடுத்துகிட்டு வா என்று குட்டி மகளிடம் சொன்னேன்.

அப்பா,நான் கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்லு என்று குழந்தையிடம் சொன்னேன். அவள் உடனே எனக்கு சில சந்தேகம் இருக்கு அப்பா என்றாள்(என் மனைவியை முறைத்து பார்த்தேன்)குழந்தைக்கு என்ன பாடம் சொல்லிகொடுத்த என்று கேட்டேன்.நீங்க புத்திசாலி தானே(!!!......???). நீங்களே சொல்லி கொடுங்கள் என்று சொல்லிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டாள்.

முதல் படத்தை எடுத்தேன் அதில் LIVINGTHINGS AND NONLIVINGTHINGS என்று இருந்தது .LIVINGTHINGS என்னவெல்லாம் என்று கேட்டேன், சரியாக பதில் சொன்னாள். அதே போல் NONLIVINGTHINGS என்னவெல்லாம் என்று கேட்டேன்.  அதற்கும் சரியான பதில் சொன்னாள். அடுத்ததாக   ஒரு கேள்வி கேட்டாள்.  LIVINGTHINGS AND NON LIVINGTHINGS என்ன அப்பா என்றாள்?

நானும் உயிர் உள்ளது எல்லாம் LIVINGTHINGS என்றும், உயிர் இல்லாதது எல்லாம் NON LIVINGTHINGS என்று கூறினேன். (என்ன ஒரு கண்டுபிடிப்பு). அடுத்த கேள்வி எனக்கு தலை சுற்றும் படி கேள்வி கேட்டாள். உயிர்னா என்ன அப்பா என்றாள்?(ஹய் பல்பு ).பதில் கூற முடியாமல் என் மனைவியை பார்த்து முழித்தேன். இப்படி ஒரு கேள்வியை கேட்டு என் உயிரை வாங்கிட்டேயே மக்கா?.என்று நினைத்து கொண்டே என் மனைவியை பார்த்தேன் அவள் என்னை பார்த்து சிரித்து கொண்டு இருந்தாள்(நல்லா மாட்டி விட்ட சந்தோசம்)

குறிப்பு::பின்பு ஒரு மணிநேரம் களித்து என் களிமண்ணை(மூளையை) உபயோக படுத்தி .உயிர்னா எது எல்லாம் வளருதோ அது எல்லாம் உயிர் உள்ளது.வளராதது உயிர் இல்லாதது என்று சமாளித்தேன் (நம்புங்கப்பா நான் தான் சொல்லிகொடுத்தேன் )  

Thursday, September 16, 2010

வில்லங்கமான விளம்பரங்கள்

 விளம்பரங்கள் நாம் அன்றாடம் தொலைகாட்சிகளில் பார்க்கிறோம் .எனக்கு சில விளம்பரங்கள் பார்க்கும் போது அதில் நடிக்கும் modelsஆண்ஆக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அந்த விளம்பரத்திற்கும் அந்த modelsக்கும் சம்பந்தமே இருக்காது.இவர்கள் மக்களை கவர்வதற்காக தான் விளம்பரம் போடுகிறார்கள். அதை கொஞ்சம் எந்த வகையான விளம்பரமோ அது சம்பந்தமாக models இருந்தால் நல்ல இருக்கும் என்பது என் கருத்து.எடுத்து காட்டாக சில விளம்பரங்களை கூறுகிறேன்.

1.KISKOL TMT கம்பிகள் இந்த விளம்பரத்திற்கு நமீதா வருகிறார் .முதலில் இந்த விளம்பரத்திற்கு பெண்கள் தேவையா .சரி இதை சொன்னால் பெண் பதிவர்கள் வருத்தபடுவார்கள் .ஆனால் நமீதா கூறும் வார்த்தைக்கும் அந்த விளம்பரத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.வார்த்தை இது தான் மச்சான்ஸ் kiss kiss kiscol என்று கூறுகிறார் நமீதா இதற்கும் இந்த விளம்பரத்திற்கும் என்ன சம்பந்தம்.(நமீதா ரசிகர்கள் யாராவது பதிவுலகத்தில் இருந்தால் கோபபடவேண்டாம் )

2 .JK -சிமெண்ட் விளம்பரமும் இதே மாதிரி தான் .ஒரு பெண் கடலில் இருந்து நீச்சல் உடையில் அப்படியே எழுந்து வருகிறார் அதற்கப்புறம் ஒரு வார்த்தை  கூட பேச மட்டங்க , JK -சிமெண்ட் என்று எழுத்து வடிவில் விளம்பரம் வரும்.என்னுடைய கேள்வி என்வென்றால் நீச்சல் உடை உடுத்து வரும் அந்த பெண்ணுக்கும் சிமெண்ட் க்கும் என்ன சம்பந்தம்

3 .JOS ALUKKAS இந்த விளம்பரத்தில் நம்ம இளைய தளபதி விஜய் வருகிறார் . நகை கடைக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்.பொதுவாக நாம் பார்க்கின்ற நகை கடை விளம்பரங்களில் பெண் modelsதான் நடிக்கிறார்கள் அவர்கள் அணிகிறார்கள் அதனால் அவர்கள் வருவதனால் தவறில்லை.விஜய் ஏன் இந்த விளம்பரத்திற்கு?(விஜய் ரசிகர்கள் கோப படவேண்டாம் )

axe விளம்பரத்தில் இந்த ஸ்ப்ரே அடித்தால் பெண்கள் எல்லாம் ஆண்கள் பின்னாடியே வந்து விடுவது போலவும் ஆடைகளை கழட்டுவது போலஇருக்கும்,இப்படி ஸ்ப்ரே அடித்தால் ஒரு பெண் பின்னால் வந்து விடுவாளா? இது  பொய் என்று எல்லருக்கும் தெரியும் ஆனால் அந்த  பெண்ணுக்கும் இந்த ஸ்ப்ரேவுக்கும் ஒரு சம்பந்தம் கிடையாது

இப்படி நிறைய விளம்பரங்கள் வருகிறது.ஒரு பொருள் வியாபாரம் அக விளம்பரம் தேவை தான் அதற்காக சம்பந்தம் இல்லாமல் நடிகைகள்,நடிகர்கள் வருவதும்,சம்பதமே இல்லாமல் ஆபாச உடை அணிந்து வருவதும் தேவையா?.அதற்க்கு பதிலாக அந்த பொருளின்  தரத்தை பற்றி எடுத்துக்கூறும் படியான விளம்பரங்கள் வருமா?



Monday, September 13, 2010

பொது மரு‌த்துவமனை அவல ‌‌நிலை?

தமிழ்நாட்டில் உள்ள எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்குள்ள அரசு பொதுமருத்துவமனை அருகில்  இருக்கிறது என்பது ஒரு  1/2  கிலோமீட்டர்- க்கு முன்பே கண்டுபிடித்து விடலாம் . அவ்வளவு தூரம் வாசனை ( நாற்றம்) வீசும்.சுகாதாரம் என்பது இங்கு  இம்மி அளவு கூட கிடையாது .  
அரசு மரு‌த்‌‌துவமனை‌க்கு பொதும‌க்க‌ள் ‌சி‌கி‌ச்சை‌க்கு சென்றால்,அங்கு நடக்கும் அலைக‌‌ழி‌ப்பை வார்த்தைகளால் சொல்லமுடியாது.நேரில் பார்த்தால் உருகாத மனமும் உருகும்.காலையில் ஊசி போட வரிசையாக நிற்கும் நோயாளிகளை பார்த்தால் பாவமாக தான் இருக்கிறது.ஒரே  ஊசியை பத்து  அல்லது  பதினைந்து பேருக்கு போடுகிறார்,சிலர் அப்படி ஊசி போடுவதால் ஏற்படும் சுகாதார கேட்டை அறிந்து  diposable ஊசி கொண்டு வந்து கொடுத்தாலும் 10 ரூபாய் கொடுத்தல் தான் அவர் வாங்கி வந்த ஊசியை போடுவார்.

இதற்குமேல் ஒரு கொடுமை நடக்கிறது அரசு மருத்துவமனைகளில். விபத்திலோ அல்லது தற்கொலையோ செய்து   இறக்கும் ஒரு மனிதனை பிரேத பரிசோதனை   செய்து அவரது குடும்பத்தில்உள்ளவர்களிடம்  கொடுக்கும் முன் அவர்களை படுத்தும்  பாடு .இறைவன் நேரில் வரமாட்டனா  என்று என்னும் அளவிற்கு மருத்துவர்  முதல் கீழ்மட்டத்தில் வேலை பார்க்கும் வேலையாட்கள்  அவர்களை அலைகழித்து சடலத்தை கொடுகின்றனர் .

கிராம‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள ஆர‌ம்ப சுகாதார ‌நிலை‌ய‌ம் முத‌ல் நக‌ர்ப்புற‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள பொது மரு‌த்துவமனை வரை த‌மிழக‌த்‌தி‌ல் 800‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட மருத்துவமனைக‌ள் உ‌ள்ளன.இவைக‌ளி‌ல் எ‌‌த்தனை மரு‌த்துவமனைக‌ள் ந‌ல்ல வச‌தியுட‌ன் நல்ல சுகாதாரத்துடன்   செய‌ல்ப‌ட்டு வரு‌‌கி‌ன்றன எ‌ன்பது கே‌ள்‌‌விக்கு‌றிதா‌ன்.

க‌ர்‌‌ப்‌பி‌ணி பெ‌ண்களு‌க்கு அரசு சா‌ர்‌பி‌ல் 6ஆ‌யிர‌ம் ரூபா‌ய் வழ‌ங்க‌ப்படு‌கிறது.இ‌ந்த பண‌த்தை ஆர‌ம்ப சுகாதார‌ ‌நிலைய‌த்‌தி‌ல் உ‌ள்ள செ‌வி‌‌‌லிய‌ர்தா‌ன் க‌ர்‌ப்‌‌பி‌ணி பெ‌ண்களு‌க்கு வா‌ங்‌கி‌க் கொடு‌க்‌கிறா‌ர். அ‌ந்த பண‌த்‌தி‌ல் 1000 ரூபா‌ய் தம‌க்கு த‌ந்தே ‌தீர வே‌ண்டு‌ம் இ‌ல்லை எ‌ன்றா‌ல் 6ஆ‌யிர‌ம் ரூபா‌ய் வா‌ங்‌கி‌த் தரமா‌ட்டே‌ன் எ‌ன்று முத‌லிலேயே அ‌ந்த ஏழை க‌ர்‌ப்‌பி‌ணி பெ‌‌ண்களை பயமு‌று‌த்‌தி வை‌த்து‌க் கொ‌ள்‌கிறா‌ர் செ‌வி‌லிய‌ர்.

த‌னியா‌ர் மரு‌த்துவமனைக‌ள் ம‌க்க‌ளிட‌ம் இரு‌ந்து பண‌த்தை ‌பிடு‌ங்கு‌‌கிறது.அரசு மரு‌‌த்துவமனையோ ம‌க்க‌ளி‌ன் உ‌யிரை எடு‌க்‌‌கிறது. ஏ‌ன் இ‌ந்த அவல  ‌‌நிலை? .

அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் மரு‌த்துவ‌ர்க‌ள், செ‌வி‌லிய‌ர்க‌ள், ஊ‌‌ழிய‌ர்க‌ள் நோயா‌ளிகளை அ‌ன்போடு‌ம்,க‌‌னிவோ‌டு‌ம் பா‌ர்‌த்து‌க் கொள்வது என்பது ஒரு கனவாகவே போய்விடுமா...!

Tuesday, September 7, 2010

நண்பனுக்கு பிறந்தநாள் கவிதை

ரமேஷ் நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கவிதை(மக்கா எனக்கு கவிதை(கழுதை) வராது இருந்தாலும் முயற்சி செய்கிறேன்) ...


சிரிப்பு போலீஸ் என்று பதிவுலகை சிரிக்க வைக்கும் நண்பா..........

சிரித்த முகத்துடன் எப்போதும் இருக்கும் நண்பா.........

சிங்கப்பூர் சென்றாலும்

சிங்கார சென்னையை மறவாத நண்பா..........

சிரிப்பு கவிஞர் என்று ஜெ-விடம் பட்டம் பெற்ற நண்பா.......

சினிமா புதிர் போட்டு அடுத்தவர்களை

சிந்திக்க(சோம்பேரியாக்கிய) வைத்த நண்பா .....  

சிந்தித்து சிந்தித்து(பதிவு எழுதுவதற்கு) தலைமுடி இல்லா நண்பா ...

சி...து ..போ .என்று சொன்னாலும் உன் பொக்கை வாய்

சிரிப்பை மட்டுமே பதிலாக சொல்லும் என் நண்பா...

சிக்கல் வந்தாலும்

சினம் கொள்ளாமல் சிரிக்கும் தோழா.............

சிங்கப்பூர் சீமாட்டிகளை துரத்தி அடித்து

சிங்கார சென்னை சீமாட்டிகளை உன் கண்

சிமிட்டில்

சிக்க வைத்திருக்கும் நண்பா ..............

சிங்கார சென்னை பெண்களுக்கு

சிம்ம சொப்பனமாக விளங்கும் நண்பா........

சிங்கம் எபோழுதும்

சிங்கள்-அ தான் வரும் என்று பதிவுலகில் தனி ஆளாக

சிலம்பு எடுத்து ரவுண்டு கட்டி(கும்மி) அடிக்கும் நண்பா .......

                                            நீ

சிக்கலில் சீக்கிரம் மாட்டி கொள்ள (கல்யாணமாக..) என்னுடைய
 
                           வாழ்த்துக்கள் ...............
  
யாருப்பா கல் எடுத்து அடிக்கிறது (எல்லாம் ஒரு நப்பாசை தான் எல்லாரும் கழுதை ஓட்டரிங்க சொல்லி ... சீ எல்லாரும் கவிதை எழுதறிங்க சொல்லி நானும் முயற்சி பண்ணினா... விடமாட்டிங்களே ....)


 கிறுக்கி தள்ளியவர்


அன்புடன் .பாபு

நமது சிரிப்பு போலீஸ்-க்கு பிறந்த நாள் ஒரு கவிதை சொல்லுங்கள் தேவா அண்ணன் என் பதிவில் போடுகிறேன் என்று கூறியதும் மறுக்காமல் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அனுப்பிய கவிதை இதோ..


நன்றி தேவா அண்ணன்

தம்பி சிரிப்பு போலிசுக்கு ஒரு கவிதை எழுத சொன்னான் ....இம்சை....

கவிதை எழுத..
முயன்று முயன்று...
கணிணியின் பட்டன் எல்லாம்...
கழன்று போய் கையோடு....
கணிணி ஸ்கிரினோடு
மல்லுக்கு நின்னாலும்...
முட்டி முட்டி மோதி
கவிதைய தேடி தேடி..
வார்த்தை கிடைக்கும் நேரத்துல..
பாவி பய..தம்பி..
சிரிப்பு போலிசு..மூஞ்சி ஞாபகத்துல
வந்தவுடன்....எல்ல கவிதையும்
என்னைய திட்டாம திட்டி புட்டு......
ஓடி ஓடி மறையுதேன்..
எப்படி நான் கவிதை சொல்ல..../
குவர்ட்டர் பாட்டிலும் கையுமா... நூறாயிசுக்கு எங்களை இம்சை பண்ணு தம்பி....!

                                                                               
                                                                                       என்றும் அன்புடன்


                                                                                                               தேவா

  டிஸ்க்கி :இங்கேயும் வந்து வாழ்த்துங்க

.

Monday, September 6, 2010

வரம்பு மீறிய செயல்கள்

செப்டம்பர் 1தேதி கிருஷ்ண ஜெயந்தி என்பதால் ஆணி(வேலை)இல்லை வீட்டில் ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்து தொழிலுக்கு விடுமுறை விட்டு விட்டு வீட்டில் இருந்தேன்.இன்று evening-ஷோ குழந்தையை கூட்டிகொண்டு செல்வோம் என்று வீட்டம்மா கூறிவிட்டாள்(பேச்சை மீற முடியுமா பிறகு யாரு அடிவாங்குறது).சரி என்று குழந்தையை கூட்டி கொண்டு theatre-க்கு போய் மின்விசிறி  இருக்கும் இடம் பார்த்து இருந்தோம்.

ரொம்பவும் கூட்டமில்லை சுமாரான கூட்டம் தான்.போனவுடன் என் பொண்ணு அப்பா popcorn-வாங்கி கொடுப்பா என்றாள்.இப்ப தானே வந்தோம் அதுக்குள்ளவ பிற்கு வாங்கி தருகிறேன் என்றேன்.உடனே பொண்ணு அவ அம்மாவை பார்த்தாள்(அவளுக்கும் தெரியும் போல இது டம்மி பீஸ்-ன்னு).என் மனைவி என்னை பார்த்து குழந்தை ஆசையாக கேட்கிறது இல்லையா போய் வாங்கி கொடுங்கள் என்றாள்(இன்னிக்கி படம் பார்த்த மாதிரி தான்).போய் ஒரு பாக்கெட் வாங்கி வந்து கொடுத்தேன்.ஏன் நாங்கள் எல்லாம் மனுசனா தோணலையா?என்றாள்.திரும்பவும் மாடி இறங்கி வந்து வாங்கிட்டு இருக்கும் போதே மணி அடித்துவிட்டார்கள்.வாங்கிட்டு மேல போனால் லைட் எல்லாம் ஆப் செய்துவிட்டார்கள் .என் சீட்டுக்கு போகும் முன் நாலு பேர கால மிதித்து.அவர்கள் என்னை பார்த்துபோங்க சார் என்றார்கள் (திட்டினத எல்லாம் வெளிய சொல்ல முடியாது.அவ்வளவு கொடூரமான வார்த்தை என்ன செய்ய?).

வந்து ஒரு வழியா என் இருக்கையில் அமர்ந்து என் மனைவியிடம் கொடுத்தேன்.அப்பொழுது தான் பார்த்தேன் என் இருக்கையின் முன்னால் ஒரு புதுமணதம்பதிகளோ?அல்லது காதலர்களா?தெரியவில்லை இருந்தார்கள்.சரி விடு நாம படத்தை பார்போம் என்று screan-அ  பார்த்த லெட்டர் சீன் முடிந்து படம் ஓடுகிறது .என் மகளும் popcorn தின்றுவிட்டாள்.சரி அடுத்து மாடி இறங்க வேண்டியது தான் (ரெடி ஆகிகோடா கைப்புள்ள)என்று நினைத்தேன் ஒன்றும் கேட்கவில்லை தப்பித்தேன் .

என் பொண்ணு என்னிடம்    ஏனப்பா அந்த அங்கிள் அந்த ஆன்ட்டி  தோள்  மீது தலை வைத்திருக்கிறார் என்று என்னிடம் கேட்டாள்.அப்பொழுது தான் நன் பார்த்தேன் முன்னால் இருந்த ஜோடியில் அவள் தோள் மீது அவன் சாய்ந்திருபதை.நான்  என் மனைவியை  பார்த்தேன் என்ன பதில் சொல்ல என்று இருவரும் முழித்தோம் . உடனே சமாளித்து அந்த அங்கிள்-க்கு காய்ச்சல் அதன் என்று கூறி சமாளித்தேன். ஒருவாறு அமைதியாகிவிட்டாள்.
 
கொஞ்ச நேரம் கூட ஆகவில்லை என் மகள் என்னிடம் அப்பா பாத்ரூம் என்றாள்.வேற வழி இன்னும் எதனை பேர் கால மிதிக்க போறோனோ (திட்டு வாங்க போறதா கொஞ்சம் மாற்றிசொன்னேன்).பாத்ரூம் போயிட்டு வந்து திரும்பி என சீட்டில் வந்து உட்காருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.படம் ஓடியது என் மகள் உறங்கிவிட்டாள் (குழந்தைகள் சினிமா வுக்கு வருவது popcorn ,ice cream சாப்பிடத்தானே ).இடைவேளை வந்தது என் மகள் தூக்கத்தை கலைத்து விட்டாள் அப்பா icecream என்றாள்,போய் என் மனைவி,எனக்கும் சேர்த்து வாங்கி கொண்டேன் (யார் திரும்பி வாங்கி கட்டி கொள்வது.)

அப்பொழுது  என் குழந்தை என்னிடம் அப்பா இபொழுது அந்த ஆன்ட்டி-க்கு காய்ச்சல் வந்துட்டுப்பா?என்றாள்.முன்னிருக்கையில் பார்த்தால் இப்பொழுது அவன் தோள் மீது அவள் சாய்ந்திருபதை பார்த்தேன்.நானும் என் மனைவியும் முழித்தோம் பதில் கூற முடியாமல்.பிறகு பேசாம படத்தை பாரு அல்லது தூங்கு என் மனைவி சத்தம்போட பேசாமல் தூங்கிவிட்டாள்.

எங்க குடும்பத்துடன்  போனாலும்  இவங்க தொல்லைதாங்க முடியலை.மற்றவர்கள் முகம்சுளிக்கும் அளவுக்கு எல்லை மீறிய செயல்கள் தேவையா?அதுவும் பொதுஇடங்களில்.என்னை மாதிரி எத்தனைபெற்றோர்கள்  இப்படிகேள்விக்கு பதில் கூற முடியாமல் தவிப்பார்கள் (குறிப்பாக ஜெ-அண்ணன்   அவர்கள்).  

குறிப்பு:
நீ ஏன் முன்சீட்ட பார்த்த படத்த பார்க்கவேண்டியது தானே என்று கமெண்ட்ஸ் போடாதீர்கள்.சினிமாவில் நடப்பது போல நம் நிஜ வாழ்விலும் மரத்தை சுற்றி டூயட் பாட வேண்டும் என்று நினைகிரார்களோ என்னவோ ?சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு என்று இவர்களுக்கு புரிய  வைப்பது யாரோ?

Friday, September 3, 2010

இந்தியா வல்லரசாகுமா?

இரண்டு மூன்று நாட்களாக வேலை அதிகம் என்பதால் பதிவு பக்கம் வர முடியவில்லை.கிடைக்கும் நேரத்தில் கொஞ்சம் வந்து போகலம் என்று கணினியில் உட்காரும் நேரம் பார்த்து கரண்ட் போய்விடுகிறது.என்ன செய்ய.

யார் கேட்டார்கள் இலவசதொலைகாட்சி பெட்டியும்,இலவச வாயு அடுப்பும்?அதற்க்கு பதிலாக ஒவ்வொரு வீட்டிற்க்கும் மானியத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சாதனங்களை கொடுத்தால் எவ்வளவுக்கு மின்சாரம் மிச்சம் பெரும்.இது ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை போலும்.நமது நாடு மற்ற நாடுகள் மாதிரி குளிர் பிரதேசமாகவோ,வெப்பம் மிகுந்த நாடோ இல்லை .நாம் ஏன் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையை பின்பற்றகூடாது?ஒரு பக்கம் புவி வெப்பம் அடைகிறது என்ற உலக நாடுகள் எல்லாம் கூறிவருகின்றன இதற்க்கு முக்கிய காரணமாக அணுமின் நிலையங்களை கூறுகிறார்கள்.


இது ஒருபுறம் இருக்க இலவசம் இலவசம் என்று கொடுத்து மக்களை சோம்பேறியாக்கிவிடுகிறார்கள் இந்த ஆட்சியாளர்கள்.அடுத்து இன்னும் சில மாதங்களில் பொது தேர்தல் வருகிறது இன்னும் பல இலவசங்கள் வர போகின்றன.மக்களும் துட்டை வாங்கி  கொண்டு ஒட்டு போடதான் போகிறார்கள்.

ஒரு மனிதனுக்கு வாழ்க்கைக்கு தேவையானது உண்ணஉணவு ,இருக்க இடம்,உடுத்தி கொள்ள துணி இவைகள் அனைத்தும் இலவசமக கிடைத்து விட்டால் எப்படி வேலை பார்ப்பான்.இந்தியா 2020இல் வல்லரசாக இது தான் வழிமுறையோ?.மீனை இலவசமாக கொடுபதிற்கு பதில் மீன் பிடிக்க கத்து கொடுகும்மா நமது அரசு அல்லது வரபோகும் அரசு?.

நமது நாடு வல்லரசாக மாற முக்கிய காரணியாக இருப்பது மனித சக்தி (manpower).இவர்களை இலவசங்கள் கொடுத்து சோம்பேரியாக்கல்மா நமது ஆட்சியாளர்கள்?

இலவசங்கள் எதற்கு தேவையோ அதற்க்கு மட்டும் இலவசம் கொடுங்கள்.என்னை பொறுத்த வரை கல்வியை மட்டும்  இலவசமாக கொண்டுங்கள்.லோன்(Education  Loan ) கொடுத்து படிக்கும் போதே  கடன்காரனாக மாற்றாதீர்கள்

குறிப்பு :
நீங்கள் இலவசதொலைகாட்சி பெட்டி வாங்கியாச்சான்னு?யாரும் comments போடாதிங்க.எனக்கு rationcard கிடையாது.(அதுதான் உங்கள்ளுக்கு  வயிறு எரியுதுன்னு கமெண்ட்ஸ் போடதீங்க)